தென்மாகாண சிறைச்சாலை தொற்றாளர்கள் எண்ணிக்கை 1,471ஆக அதிகரிப்பு.
தென் மாகாண சிறைச்சாலைகளில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,471ஆக உயர்வடைந்துள்ளது என்று தென் மாகாண கொரோனாப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் அதிகாரி சாமர மஹகமகே இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
திஸ்ஸமஹாராமய, பூஸ்ஸ, அங்குனகொலபெலஸ்ஸ, காலி, மாத்தறை, வீரவில மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய சிறைச்சாலைகளிலேயே தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகளவான தொற்றாளர்கள் பூஸா சிறைச்சாலையிலேயே இனங்காணப்பட்டுள்ளனர். பூஸா சிறைச்சாலையில் இதுவரை 763 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
குறைந்தளவிலான தொற்றாளர்கள் அம்பாந்தோட்டை சிறைச்சாலையில் இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த சிறைச்சாலையில் இதுவரை 4 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதேபோன்று அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் 283 தொற்றாளர்களும், காலி சிறைச்சாலையில் 117 தொற்றாளர்களும், வீரவில சிறைச்சாலையில் 50 தொற்றாளர்களும், மாத்தறை சிறைச்சாலையில் 31 தொற்றாளர்களும், திஸ்ஸமஹாராம சிறைச்சாலையில் 18 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.