வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 39மில்லியன் நிதி ஒதுக்கீடு.
தற்போது தொழில்பாதிப்பிற்கு உள்ளான 64382 குடும்பங்களுக்கு 2000 ரூபாய் வழங்குவதற்கு என 39மில்லியன் ரூபா நிதியினை அரசு ஒதுக்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.
பிரதேசசெயலகங்களில் தற்போது நிவாரணவேலைகளுக்கான பணிக்குழுவினர் வேகமாக செயற்பட்டுவருகின்றதாகவும் அதேவேளை மாவட்டத்தில் உள்ள பிரதேச வெயலகங்களில் இதுவரை 52கொரோனா நோயாளிகள் அடையளம் காணப்பட்ட நிலையிலும் மக்களுக்கான நிவாரண பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
கடந்தகாலங்களைவிட தற்போது கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள ஊரடங்கு எதிர்வரும் 30ம் திகதி வரையும் நடைமுறையில் இருக்கும் காலங்களில் மக்களின் அனாவசியமான நடமாட்டங்கள் அதிகரித்துள்ளதாக அவதானிக்க முடிகின்றது. இதனை மக்கள் உடனடியாக நிறுத்துமாறும் அல்லாத பட்சத்தில் சட்டநடவடிக்கைக்கு உள்ளக்கப்படவுள்ளதாகம் இதனை கண்காணிப்பதற்காக பொலிஸ் இராணுவத்தினர் கண்காணிப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.