கொவிட் நிமோனியாவுக்கு முன் ஏற்படும் நுரையீரல் சிக்கலே பெரும்பாலான கொரோனா மரணத்துக்கு காரணம்
நாட்டில் பெரும்பாலான கொரோனா இறப்புகள் கொவிட் நிமோனியாவுக்கு முன் ஏற்படும் நுரையீரல் சிக்கல் காரணமாக என்று தெரியவந்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்றால் இறந்த சுமார் 100 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நுரையீரல் மற்றும் உள் உறுப்புகளில் மாற்றங்கள் காணப்படுவதாகவும் தேசிய தொற்று நோய்களுக்கான தடயவியல் நிபுணர் டாக்டர் சன்ன பெரேரா தெரிவித்தார்.
பிரேத பரிசோதனை மரணங்களில் சுமார் 30 சதவிகிதம் கோவிட் நிமோனியாவால் ஏற்பட்டவை என்றும் நுரையீரலில் இரத்தக் கட்டிகளால் குறைவான இறப்புகளே நிகழ்ந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொவிட் வைரஸ் நுரையீரலின் சுவர்களைத் தாக்கி கோவிட் நிமோனியாவை ஏற்படுத்துகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய்களுக்கான தடயவியல் நிபுணர் டாக்டர் சன்னா பெரேரா மேலும் தெரிவித்தார்.