வீடுகளுக்குள் மரணித்த இருவருக்குப் பரிசோதனையில் கொரோனா உறுதி!

இரண்டு வீடுகளுக்குள் மர்மமான முறையில் மரணித்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மாத்தளை – நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
வீடுகளுக்குள்ளே மரணித்த இவ்விருவரின் சடலங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போதே, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
நாவுல கணுமுலயாய பகுதியில் 65 வயதானவரும், கெஹல்எல்யாய பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதானவருமே இவ்வாறு மரணித்துள்ளனர்.
இவ்விருவருடன் சேர்த்து, நாவுல பொலிஸ் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 06ஆக அதிகரித்துள்ளது.