மங்கள சமரவீரவின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை பொரளை மயானத்தில் இடம்பெறவுள்ளது.
65 வயதான மங்கள சமரவீர கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு லங்கா ஹொஸ்பிடலில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார்.