பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் 20 பேருக்குக் கொரோனா!

பியகம பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணியாற்றும் 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், குறித்த பொதுச் சுகாதாரப் பிரிவில் அன்டிஜன் பரிசோதனை, பி.சி.ஆர். பரிசோதனைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலையில் பியகம பொதுச் சுகாதாரப் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பிரிவுக்குட்பட்ட மாவமங்கடிய நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன் முதல்நிலை தொற்றாளர்கள் 305 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடைய 2 ஆயிரத்து 979 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பியகம பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேலும் கூறியுள்ளனர்.