ஊவா மாகாணத்தில் 26,523 கொரோனாத் தொற்றாளர்கள்! – 291 பேர் மரணம்
கொரோனாவின் மூன்றாம் அலையின்போது ஊவா மாகாணத்தில் இதுவரை 26 ஆயிரத்து 523 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று ஊவா மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.
அத்துடன் 291 மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக பதுளை மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரத்து 136 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 223 தொற்றாளர்கள் மரணமடைந்துள்ளனர்.
மொனராகலை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 387 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 68 பேர் மரணமடைந்துள்ளனர்.