முல்லைத்தீவில் ஒரே நாளில்நால்வர் கொரோனாவால் சாவு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரே நாளில் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நால்வரே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
முள்ளியவளையின் கணுக்கேணி கிழக்கு, தண்ணீரூற்று, கிச்சியாபுரம் மற்றும் ஒட்டுசுட்டானின் பெரிய சாளம்பன் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த70, 47, 68 வயதுகளையுடைய ஆண்கள் மூவரும், 42 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 08 ஆக அதிகரித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக கொரோனா மரணங்கள் சடுதியாக அதிகரித்து வருகின்ற நிலையில் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.