இருபதுக்கு 20 சர்வதேச தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணியுடன் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 சர்வதேச தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணியுடன் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 சர்வதேச தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 19 பேர் கொண்ட மஹ்மதுல்லாஹ் ரியாத் தலைமையிலான பங்களாதேஷ் அணியின் குழாமில் முக்கிய வீரர்களான முஷ்பிகுர் ரஹீம் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.
ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு ஒரு பயிற்சியாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி, பங்களாதேஷூக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி செப்டம்பர் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த தொடருக்கான பங்களாதேஷ் அணியின் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணியானது இறுதியாக அவுஸ்திரேலியா அணியுடன் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது சர்வதேச தொடரை 4-1 என்ற அடிப்படையில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து தொடருக்கான பங்களாதேஷ் குழாம்
மஹ்மதுல்லாஹ் ரியாத் (அணித்தலைவர்), ஷகீப் அல் ஹஸன், முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், சௌமியா சர்கார், மொஸாதிக் ஹொஸைன், அபிப் ஹொஸைன், நயிம் ஷேக், நூரூல் ஹஸன் சொஹான், சமிம் ஹொஸைன், ரூபல் ஹொஸைன், முஸ்தபீசுர் ரஹ்மான், தஸ்கின் அஹமட், சைபுடீன், சூரிபுல் இஸ்லாம், தைஜூல் இஸ்லாம், மெஹதி ஹஸன், அமினுல் இஸ்லாம் பிப்லொப், நாஸூம் அஹமட்