தனிமைப்படுத்தப்பட்டார் யாழ்.மாவட்ட அரச அதிபர்! – சங்கானை பிரதேச செயலருக்கும் தொற்று.

யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மாவட்ட அரச அதிபரின் பணிக்குழாமிலுள்ள அலுவலக உதவியாளர் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, சங்கானை பிரதேச செயலர் திருமதி பிரேமினிக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சென்றபோது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.