இலங்கையில் 2000 அப்பாவி உயிர்களை 11 நாள்களில் பறித்த கொடிய கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 11 நாள்களில் 2 ஆயிரத்து 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட் 14 முதல் 24 வரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நாளாந்தம் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 14ஆம் திகதி 161 பேரும், 15ஆம் திகதி 167 பேரும், 16ஆம் திகதி 171 பேரும், 17ஆம் திகதி 170 பேரும், 18ஆம் திகதி 186 பேரும், 19ஆம் திகதி 195 பேரும், 20ஆம் திகதி 198 பேரும், 21ஆம் திகதி 183 பேரும், 22 ஆம் திகதி 194 பேரும், 23ஆம் திகதி 190 பேரும், 24ஆம் திகதி 198 உயிரிழந்துள்ளனர்.