55 கிராமசேவகர்களுக்குக் கொரோனா! – மேலும் 81 பேர் தனிமைப்படுத்தலில்….

கம்பஹா மாவட்டத்தில் 55 கிராம சேவகர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும் 81 கிராம சேவகர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் இலங்கை கிராம சேவகர்கள் சங்கத்தின் கம்பஹா மாவட்ட தலைவர் காமினி ரணதுங்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த கிராம சேவகர்களுக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தொற்றுக்குள்ளான கிராம சேவகர்களுக்குப் பதிலாக வேறு பிரிவுகளைச் சேர்ந்த கிராம சேவகர்கள் தற்காலிகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.