தொற்றாளர்கள் அதிகரிப்பால் மேலும் நான்கு சிகிச்சைப் பிரிவுகள் கொரோனா விடுதிகளாக மாற்றம்!

காலி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கராப்பிட்டிய வைத்தியசாலையின் மேலும் நான்கு விடுதிப் பிரிவுகள் கொரோனா சிகிச்சை விடுதிப் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக குறித்த வைத்தியசாலையின 35, 36 மற்றும் 68ஆவது விடுதிப் பிரிவுகளுக்கு மேலதிகமாக 11,15,17 மற்றும் 21 ஆகிய விடுதிப் பிரிவுகள் கொரோனா சிகிச்சை விடுதிப் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன.
தென் மாகாணத்தில் 48 ஆயிரத்து 619 கொரோனாத் தொற்றாளர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 24,830 பேர் காலி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.