சட்டங்கள் இறுக்கமாக்கப்பட்டமையினால் வெறிச்சோடிக்காணப்பட்ட மீன் சந்தைகள்!
மட்டக்களப்பில் அதிகரித்துவரும் கொவிட் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் மட்டக்களப்பில் மக்கள் உட்பட அரச அதிகாரிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை இறுக்கமாக்குவது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரும் கொவிட்தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் அவர்களினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையின் பிற்பாடு மட்டக்களப்பு நகர் பகுதியை அண்மித்துள்ள மீன் சந்தைகள் வெறிச்சோடிக் காணப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.