அரக்கோணத்தில் நள்ளிரவில் பூட்டிய வீட்டிற்குள் கேட்ட சத்தத்தால் நடுங்கி போன கிராமவாசிகள்

அரக்கோணத்தில் பூட்டிய வீட்டிற்குள் இருந்து பூஜை செய்வது போன்ற சத்தம் கேட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள கிழவனம் பகுதியை சேர்ந்தவர் ஆசிர்வாதம் (57).

இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். கிழவனத்தில் அவருக்கு சொந்தமான வீட்டை பூட்டிவிட்டு வெளியூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் 25 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்து நள்ளிரவில் மணி சத்தம் மற்றும் மந்திரங்கள் போன்றவை உச்சரிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றபோது வீட்டிற்குள் 2 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நள்ளிரவில் பூட்டிக் கிடந்த வீட்டைத் திறந்து பூஜைகள் நடப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து பொது மக்கள் உடனடியாக அரக்கோணத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூஜை சாமான்களை கைப்பற்றியதோடு ஆரோக்கியம் மற்றும் அவரது நண்பர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர் கூறியது, 25 ஆண்டுகளாக புட்டி இருக்கும் வீட்டில் பேய் இருக்கலாம் ஒரு மந்திரவாதி கூறியதால் பூஜை செய்ததாக கூறினார். இருப்பினும் பொலிஸ் அதிகாரிகள் புதையல் எடுப்பதற்காகக் குழந்தையை நரபலி கொடுக்க ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.