யாழில் கொரோனா அசுர வேகம்! இன்று மாத்திரம் 414 பேர் அடையாளம்! 4 பேர் உயிரிழப்பு.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் 414 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனைகளின்போது 364 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர். அதேவேளை, பி.சி.ஆர். பரிசோதனைகளின்போது 50 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகபட்சமாக சாவகச்சேரியில் 124 பேரும், கரவெட்டியில் 102 பேரும் அடங்குகின்றனர். அதேவேளை, பருத்தித்துறையில் 56 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குடாநாட்டில் இன்று 4 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.