மஹிந்த வைத்தியசாலையில் அனுமதி என வந்த செய்தி வதந்தியாகும் : யோஷித்த ராஜபக்ஸ

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் பரப்பிய கதைகளில் எவ்வித உண்மையுமில்லை என பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானியும் மகிந்தவின் மகனுமான யோஷித்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரதமர், சிறந்த உடல்நலத்துடன், தனது பணிகளை வழமை போன்று செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே இவ்வாறான வதந்திகளை தேவையற்றவகையில் பரப்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மை இல்லை என பிரதமரின் செயலாளர் காமினி செனரத் லங்கா தெரிவித்தார்.

பிரதமர் இன்று காலை இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் பகல் உணவும் உட்கொண்டதாக காமினி செனரத் கூறினார்.

அவர் அலரி மாளிகையில் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறினார்.

இன்று நடைபெற்ற கொரோனா ஒடுக்க குழு கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும் பிரதமர் கூறினார்.

 

Leave A Reply

Your email address will not be published.