இனி 3வது டோஸ் கொடுப்பதா? இல்லை இளைஞர்களுக்கு 1வது டோஸ் கொடுப்பதா? (Video)
கொவிட் ஒடுக்குதல் தொடர்பான சிறப்பு குழு கூட்டம் இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. தற்போதைய ஊரடங்கு உத்தரவை அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போதைய வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தில் நிலவரம் குறித்து ஜனாதிபதி , ஆகஸ்ட் 31 க்குள், 30 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 85% க்கும் அதிகமானோருக்கு முழுமையாக தடுப்பூசி போட முடியும் என்று தெரிவித்தார்.
இருப்பினும், செப்டம்பரில் 18 மில்லியன் டோஸ் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 18-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பிறகு மூன்றாவது டோஸ் அக்டோபரில் கொடுக்க முடியும் எனும் கருத்தை பிரசன்ன குணசேன முன்வைத்தார்.