புலம்பெயர் இலங்கையர்களிடம் இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கை
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் இலங்கை அரசாங்கம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதாவது, அரசாங்கம் மேற்கொண்டுள்ள கொரோனா வைரசிற்கு எதிராக மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு அவர்கள் உதவவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் தேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு மருத்துவமனைகளுக்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை அமைச்சரிடம் கையளித்தவேளை அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். நாட்டின் சுகாதார துறை கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த தருணத்தில் இந்த உபகரணங்கள் மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கு உதவியாக அமையும் என அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் மக்களை காப்பாற்றுவதற்காக இலங்கையிலும் வெளிநாட்டிலும் வாழ்பவர்கள் உதவவேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது வேண்டுகோளை ஏற்று பலர் மருத்துவமனைக்கு உதவமுன்வந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.