இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா வழங்கிய ஆலோசனை
சிறிலங்காவின் பொருளாதார செயல்திறனை, மேம்படுத்திக் கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளதாவது, உறுதியான பொருளாதார அடித்தளத்தை உருவாக்கும் மாற்றங்களில், சிறிலங்கா ஈடுபட வேண்டும்.
முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சில சவால்கள், வரம்புகள் மற்றும் திறந்த, வெளிப்படையான சூழலின் தேவை பற்றியும், முதலீட்டாளர்களின் ஆபத்து தொடர்பாகவும் சிறிலங்காவின் புதிய நிதியமைச்சருடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.
சிறிலங்காவின் உயர்தர முதலீட்டாளர்களை ஈர்க்க விரும்புவது தொடர்பில் அவரிடம் தெரிவித்திருக்கிறேன். அத்துடன் நாட்டின் பொருளாதாரம், தற்போது சிறந்த ஆரோக்கிய நிலையில் இல்லை.
இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம், வழங்கிய வளங்களைப் பயன்படுத்துவதே தீர்வுக்கு வழிவகுக்கும் என்று தாம் நம்புவதாகவும் அமெரிக்க தூதுவர் அலைய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.