தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் 581 பேர் கைது.

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நேற்று 581 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுடன் 85 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 61 ஆயிரத்து 587 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேல் மாகாணத்துக்கு உட்பிரவேசிக்க மற்றும் வெளியேறுவதற்கு முயற்சித்த 1792 பேர் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் 805 வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.