அசங்க நவரத்னவுக்குக் கொரோனா! – இதுவரை 25 எம்.பிக்களுக்குத் தொற்று.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்னவுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இதுவரை பாராளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர் பந்துல குணவர்தன, ஜனக வக்கும்புர மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.