இலங்கையர்கள், இத்தாலிக்குள் நுழைவதற்கான தடையை இத்தாலி நீக்குகிறது!
தெற்காசிய பிராந்தியத்தில் புதிய கோவிட் 19 விரிவானதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 29 முதல் இலங்கையிலிருந்து இத்தாலிக்கு செல்லும் விமானப் பயணத்துக்கான தடையை நீக்க
விமானங்களுக்கான ஐந்து மாத தடையை நீக்குவதன் மூலம் , ஏப்ரல் 29 க்கு முன்னர் இத்தாலியில் நிரந்தர வதிவிடமுள்ளவர்கள் , இத்தாலிய குழந்தைகளின் பெற்றோர்கள், இத்தாலியில் படிக்கும் மற்றும் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை பெறுபவர்கள் ஆகியோரை , எந்த பிரச்சனையும் இல்லாமல் இத்தாலிக்குள் நுழைய .இத்தாலிய சுகாதார அமைச்சகம் இன்று (30)முடிவு செய்துள்ளது.
இத்தாலி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இத்தாலியில் நுழையும் போது இந்த நபர்கள் அனைவரும் இத்தாலிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்பதாகும்.