ISIS-K தற்கொலைதாரி மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகளும் பலி
காபூல் விமான நிலையத்தில் ISIS-K தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு ட்ரோன் தாக்குதலைத் தொடங்கியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் 6 குழந்தைகளும் அடங்குவர்.
இறந்த ஒரு குழந்தை 2 வயதையுடையவராகும்.
இதற்கிடையில், தாக்குதலில் இருந்து தப்பிய குடும்பத்தில் ஒருவர் “நாங்கள் ஒரு சாதாரண குடும்பம்” “நாங்கள் ISIS-Kயோ அல்லது தயேஷ்சோ அல்ல,” என என CNN தொலைக் காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
ட்ரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டதை அக்கம்பக்கத்தினர் மற்றும் நேரில் பார்த்தவர்கள் உறுதி செய்தனர்.
இதற்கிடையில், அமெரிக்க இராணுவமும் பொதுமக்கள் கொல்லப்பட்டதை நேற்று ஒப்புக் கொண்டது. அப்பாவி உயிர்களை இழந்ததால் தங்களுக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாகவும், என்ன நடந்தது என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என, அங்கு வாழ்வோர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க இராணுவத் தளத்தின் முன் நள்ளிரவில் தற்கொலைப் தாக்குதல் ஒன்றை நடத்த தயார் நிலையில் டிரோன் தாக்குதல் நடந்த இடத்துக்கு அருகே இருந்த வாகனம் இருந்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அந்த வாகனம் தற்கொலைத் தாக்குதலுக்கான கார் வெடிகுண்டாகப் பயன்படுத்தப்பட இருந்தாக சந்தேகிக்கப்படுகிறது. அல்லது தற்கொலைப்படை தீவிரவாதி காரில் ஏறி விமான நிலையத்திற்கு செல்ல திட்டமிட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
வாகனத்திற்குள் பல தற்கொலை குண்டுவீச்சாளர்கள் இருந்ததாக தகவல் கிடைத்ததாக பென்டகன் கூறுகிறது.
எனினும், இது ஒரு தற்காப்பு தாக்குதல் என அமெரிக்கா தெரிவத்துள்ளது.
கிடைத்த தகவல்களின்படி, காரில் மூன்று பேர் இருந்தனர் எனவும், ஏனையோர் அப்பகுதியை கடந்து சென்றவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, தாக்குதலில் உயிரிழந்த 13 வீரர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன் டெலாவேருக்கு சென்றார்.