வடமராட்சியில் இரு வயோதிபர்கள் கொரோனாவால் மரணம்!

யாழ்., வடமராட்சியில் வயோதிபர்கள் இருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது.
அதேவேளை, மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த செம்பியன்பற்று மாமுனையைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.