சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது சிறுவன் பலி!

வவுனியா பம்பைமடு பகுதியில் கொட்டகை ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒன்றரை வயதான குழந்தை ஒன்று பலியாகியுள்ளான்.
குறித்த சம்பவம் நேற்றயதினம் மாலை இடம்பெற்றது.
நேற்றையதினம் மாலை குறித்த குழந்தை தனது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் கொட்டகையின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் படுகாயமடைந்த அவன் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். எனினும் குழந்தை மரணமடைந்துள்ளது.
சம்பவத்தில் பம்மைமடு பகுதியை சேர்ந்த சுயந்தன் கீர்த்திகன் என்ற ஒன்றரை வயது குழந்தை மரணமடைந்துள்ளது.