கொரோனாத் தொற்றால் பொலிஸ் அதிகாரியின் மனைவி, மகன் மரணம்!

பொலிஸ்மா அதிபரின் செயலகத்தில் இணைந்து சேவையாற்றி வருகின்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் மனைவி, மகன் ஆகியோர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
பொலிஸ் அதிகாரியின் புதல்வர் சட்ட மாணவர் என்பதுடன் கொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில், கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
பொலிஸ் அதிகாரியும் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர் குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவரது மனைவி கடந்த வாரம் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.