வயோதிபத் தாய் ஒருவரை சந்தையில் விட்டுச் சென்றவர்களுக்கு வலைவீச்சு!
நுவரெலியா பொலிஸ் நிலையத்தை அண்மித்து அமைந்துள்ள வாராந்தச் சந்தைப் பகுதியில் 75 வயது தாய் ஒருவர் அநாதரவாக விட்டுச் செல்லப்பட்டுள்ளார் என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தத் தாயைப் பொறுப்பேற்பதற்கு ஒருவரும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண், தான் நுவரெலியா மார்கஸ்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், லபுக்கலைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் முன்னுக்குப்பின் முரணானத் தகவல்களை வழங்கியுள்ளார்.
நுவரெலியா வாராந்தச் சந்தையில் உரிமையாளர் இல்லாத வியாபார நிலையமொன்றிலேயே குறித்த வயோதிபப் பெண் விட்டுச் செல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய உரிய இடத்துக்குச் சென்ற நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.