ஓபிஎஸ் மனைவியின் இறுதி சடங்கை பெரியகுளத்தில் நடத்த ஏற்பாடு : உருக்கமாக விசாரித்த சசிகலா

உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடல் பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, அங்குள்ள மயானத்தில் இறுதி சடங்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி(63). இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரு வாரங்களாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக மூத்த அமைச்சர்களுடன் தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக மூத்தத் தலைவர்களுடன் மருத்துவமனைக்கு நேரில் வந்து ஓபிஎஸ் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதேபோல விசிக தலைவர் திருமாவளவன், திக தலைவர் வீரமணி உள்ளிட்டப் பிறக்கட்சித் தலைவர்களும் நேரில் ஆறுதல் கூறினர். சசிகலா நேரில் வந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக மூத்த அமைச்சர்களுடன் தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக மூத்தத் தலைவர்களுடன் மருத்துவமனைக்கு நேரில் வந்து ஓபிஎஸ் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதேபோல விசிக தலைவர் திருமாவளவன், திக தலைவர் வீரமணி உள்ளிட்டப் பிறக்கட்சித் தலைவர்களும் நேரில் ஆறுதல் கூறினர். சசிகலா நேரில் வந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து விஜயலட்சுமியின் உடல் சொந்த ஊரான பெரியகுளத்துக்கு 6.30 மணிக்கு கொண்டுவரப்பட்டது.
பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பாஜக தலைவர் அண்ணாமலை இரவு 8 மணிக்கும், அமமுக தலைவர் டிடிவி தினகரன் இரவு 10 மணிக்கும் அஞ்சலி செலுத்த வரவுள்ளதாக தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்திற்கு விஜயலட்சுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் சென்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு எரியூட்டுவதற்கான ஏற்பாடுகளை ஓபிஎஸ் உறவினர்கள் செய்துள்ளனர்.

அதிமுக மரபுக்கு போட்டியிடும் வி.கே.சசிகலா, அவரது மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்தை புதன்கிழமை சந்தித்தார்.
ஜெயலலிதாவின் விசுவாசிகள் இருவரும், அவரது இறப்புக்குப் பிறகு போட்டி உச்சத்தில் இருந்தனர் மற்றும் பிப்ரவரி 2017 இல் ஏற்பட்ட மோதலில் இருந்து கனிவானவர்கள், சென்னை ஜெம் மருத்துவமனையில் சிறிது நேரம் சந்தித்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் தனது கணவர் 3 முறை தமிழக முதல்வராகவும், அமைச்சராகவும் இருந்த காலங்களிலும் எவ்வித அரசு விழாக்களிலும் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார். 2016-இல் தேனியில் நடந்த 68 ஜோடி திருமண விழாவில் மட்டும் கலந்து கொண்டுள்ளார். தற்போது அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இணையங்களில் பகிரப்படும் படங்களும் அவர் அந்த விழாக்களில் கலந்து கொண்ட படங்கள்தான் என அவரது உறவினர்கள் வருந்துகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.பாலமுருகன் கடந்த மே 14 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தற்போது மனைவியும் உயிரிழந்திருப்பது ஓபிஎஸ் குடும்பத்தினரைப் பெரும் வருத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது.