காட்டு யானைகளால் மரவெள்ளி, தென்னை, மா போன்ற பயிர்களை அழித்துத் துவம்சம்.
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தின் எல்லைப்புறக் கிராமமான கண்ணபுரம் கிழக்கு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் புகுந்த 2 காட்டு யானைகளால் கிராம மக்களால் செய்கை பண்ணப்பட்டிருந்த மரவெள்ளி, தென்னை, மா போன்ற பயிர்களையும் அழித்துத் துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக அக்கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இரவு 8 மணியளவில் அக்கிராமத்திற்குள் புகுந்த 2 காட்டுயானைகள் அங்கிருந்து பயிர்களை துவம்சம் செய்த வேளை மக்கள் ஒன்றுகூடி தீப்பந்தம் ஏந்தியும், பட்டாசு கொழுத்தியும், உரத்த குரலில் சத்தமிட்டும், விரட்டியுள்ளனர்.
மட்டக்களப்பு, மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் மிக நீண்டகாலமாகவிருந்து காட்டுயானைகளின் அட்காசங்களும், தொல்லைகளும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.