தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 621 பேர் கைது!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 621 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமமையகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பயணித்த 82 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி பயணித்தக் குற்றச்சாட்டில் 63 ஆயிரத்து 331 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.