“மணமகள் தேவை”விசித்திரமான முறையில் விளம்பரம் செய்த தேநீர் கடைக்காரர் – குவியும் வரன் அழைப்புகள்!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் உன்னிகிருஷ்ணன்(33). இவர் திருமணத்திற்கு வரன் தேட விசித்திரமான ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளார்.

அந்த விளம்பரத்தில், எந்த வாழ்க்கை துணையை எதிர்பார்த்து நான் காத்திருக்கும் காலம் நீண்டு கொண்டே இருக்கிறது. அதனால் அதற்கு தீர்வு காண எனக்கு ஒரு யோசனை வந்தது.

அதன்படி எனது கடையில் ‘மணமகள் தேவை’ என பிளக்கார்ட் போல விளம்பரம் கொடுத்திருந்தேன் என தெரிவித்துள்ளார். மேலும், அதில், ஜாதி, மாதம் பேதமில்லை என சொல்லி எனது செல்போன் நம்பரையும் கொடுத்திருந்தேன். அதை எனது நண்பர் போட்டோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்துள்ளார்.

இதனால், அவருக்கு எனக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது ஓயாமல் என் செல்போனின் ரிங்டோன் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவிலிருந்து மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, இத்தாலி மாதிரியான நாடுகளிலிருந்தும் அழைப்புகள் வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை போலவே வாழ்க்கை துணையை எதிர்பார்த்திருக்கும் இளைஞர்கள் சிலரும் தனக்கு அழைப்பு விடுத்து வருவதாகவும் உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதில், தங்களுக்கு பிடிக்காத வரன்களின் தொடர்பு எண்ணை எங்களுக்கு பகிருங்கள் என அவர்கள் உன்னியிடம் கோரிக்கை வைத்து வருகிறார்களாம்.

Leave A Reply

Your email address will not be published.