கொரோனாச் சாவு எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாது! இராணுவத் தளபதி.
கொரோனாச் சாவு எண்ணிக்கையைத் தம்மால் உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதேவேளை, தொற்றாளர்களின் எண்ணிக்கையை மறைக்கும் நோக்கும் தமக்குக் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைக் கொரோனா தாக்கினால் அவர்கள் தொற்றிலிருந்து தப்புவது கடினம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுமே கொரோனாவால் அதிகம் உயிரிழக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், சகல தரப்பினரும் தடுப்பூசிகளைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 06ஆம் திகதிக்குப் பின்னர் தளர்த்துவதா? அல்லது நீடிப்பதா? என்பது தொடர்பில் இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தலைமையிலான கொரோனா ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.