நியூஸிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையர் சுட்டு கொலை..!
நியூஸிலாந்திலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் தீவிரவாதியான இலங்கையர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்பொருள் அங்காடியொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்தே, பொலிஸார் இந்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நாட்டு பொலிஸாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் இருந்த அடிப்படைவாத கொள்கைகளை கொண்ட இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலானது, ஒரு தீவிரவாதத் தாக்குதல் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமொன்றின் கொள்கைகளை கொண்ட ஒருவரே இவ்வாறு சூட்டு கொல்லப்பட்டுள்ளார்.
2011ம் ஆண்டு நியூஸிலாந்திற்கு சென்றுள்ள இந்த நபர், 2016ம் ஆண்டு முதல் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரினால் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.