40 இலட்சம் சினோபார்ம் நாளை இலங்கைக்கு!

சீனாவின் தயாரிப்பிலான 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளன.
இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் தளத்தில் இந்தத் தகவலைப் பதிவிட்டுள்ளது.
ஒரே நாளில் அதிகூடிய சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்குக் கிடைக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
குறித்த 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளுடன் சீனாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2 கோடி 20 இலட்சமாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.