ஒரு தொகுதி கேரள கஞ்சா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்பு!
மன்னார் – பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொது மயானத்திற்குப் பின் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சா நேற்று மாலை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி மற்றும் மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு தற்காலிக பொறுப்பதிகாரி C.I.குமுதுகுமார, உப பொலிஸ் பரிசோதகர் ராமநாயக தலைமையிலான அணியினரே மேற்படி கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.
பேசாலை மயான பகுதியின் பின்புறம் உள்ள காணி ஒன்றில் சூட்சுமமான முறையில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த மேற்படி 51கிலோ 250 கிராம் கேரளா கஞ்சா போதைப்பொருளே பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்படி கைப்பற்றப்பட்ட கஞ்சா மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கடத்தலுடன் சம்மந்தப்பட்டவர்கள் மற்றும் கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.