நியூசிலாந்தில் பேயாட்டம் ஆடிய இலங்கையரது விபரம் வெளியானது (பிந்திய இணைப்பு)
நியூசிலாந்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பலரைக் கத்தியால் குத்திய இலங்கையரின் அடையாளம் தற்போது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் காத்தான்குடியைச் சேர்ந்த முகமது சம்சுதீன் அதில் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிற்காலத்தில் அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்து நியூசிலாந்து போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார். எனினும் அவற்றையெல்லாம் மீறி அவர் பலரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றுள்ளார். அவரது கத்திக் குத்துக்கு இலக்கான பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முகமது சம்சுதீன் அதில் போலீசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டார்.
பிந்திய செய்தி:
முகமது சம்சுதீன் அதில், காத்தான்குடி – 01 யை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரிய வருகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்ட இவர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.
1989 ஆம் ஆண்டு பிறந்த இவர் 7 வயதில் , ( 2011 ஆம் ஆண்டு) நியூசிலாந்து சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
4 சகோதரங்களை கொண்ட குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாக பிறந்துள்ளார். இவர் கொழும்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுள்ளார்.
ஒரு பெண் சகோதரியும் தந்தையாரும் கனடாவில் வசிக்கும் நிலையில், ஏனைய இரண்டு சகோதரர்களும் கட்டார் சவுதியில் வசிக்கின்றனர் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.