கொரோனாவினால் உயிரிழந்த உடல்களை வட்டமடு பிரதேசத்தில் நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கை.
கொரோனாவினால் உயிரிழந்த உடல்களை நல்லடக்கம் செய்வதற்காக ஓட்டமாவடி மஜ்மா நகருக்கு அடுத்து கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வட்டமடு பிரதேசத்தில் நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அதற்கு தடையாக இருந்த காரணங்களைக் கண்டறிந்து தற்போது சீர் செய்யப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்வதற்கான முயற்சிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருதாக என அமைச்சர் மஹிந்தானவின் இணைப்புச் செயலாளரும் யட்டிநுவர பிரதேச சபை உறுப்பினருமான வசீர் முக்தார் தெரிவித்தார்.
கொரோனாவினால் உயிரிழந்த உடல்களை கிண்ணியா வட்டமடு பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்படும் விவகாரம் தொடர்பில் கண்டியில் இருந்து விஜயம் செய்த குழுவினர் மாவட்ட செயலாளர், பிரதேச சபைத் தலைவர், பிரதேச செயலாளர், இப்பிராந்திய உயர் இராணுவ அதிகாரி உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிதை அடுத்து அன்று ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படவுள்ள இடத்தையும் நேரில் பார்வையிட்டனர்.
இது தொடர்பில் விடுத்துள்ள ஊடக செய்தில் அமைச்சர் மஹிந்தானவின் இணைப்புச் செயலாளரும்; யட்டிநுவர பிரதேச சபை உறுப்பினர் வசீர் முக்தார் இவ்வாறு இதனைத தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இங்கு நல்லடக்கம் செய்வதற்காக இலங்கை இராணுவத்தினருடன் இணைந்து கிண்ணியா அபிவிருத்தி குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தௌபீக், மாவட்ட செயலாளர் சமன் அதுகோரள, கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் முஹம்மட் நிஹார், பிரதேச செயலாளர் அனஸ், மற்றும் சிவில் சமூகத்தின் பல பிரதிநிதிகள் விசேடமாக அப்துல் அஸீஸ் ஆகியோர் இதற்காக அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று அவர் தெரிவித்தார்.
ஜனாஸா நல்லடக்கத்திற்காக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் வட்டமடு பிரதேசத்தில் 9.9 ஏக்கர் அரச காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இந்த குறித்த இடத்தில் நல்லடக்கம் செய்வதற்கென இலங்கை இராணுவம் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் அனுமதி பெறப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக சுகாதார அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்வதில் தாமதம் கண்டறியப்பட்டு உடனுடக்குடன் அமைச்சர் அலி சப்ரியுடன் தொடர்பினை ஏற்படுத்தி இது பற்றி அவருடைய ககவனத்தில் கொண்டு செல்லப்பட்டு சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் மற்றும் இந்த செயற் திட்டத்திற்கு பொறுப்பாக இயங்கும் இராணுவ அதிகாரி கேர்ணல் ரவீந்திர ஜயசிங்க , மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர், ஆகியோருக்கு இடையிலான ஓர் ஒருங்கிணைப்பினை உடனடியாக ஏற்படுத்தி இதில் காணப்பட்ட சில தடைகளை நிவர்த்தி செய்து நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கைளை துரிதமாக மேற்கொள்ள இந்த சந்தர்ப்பம் வழிவகுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதேவேளையில் கிண்ணியா பிரதேச சபை தவிசாளரின் வேண்டுகோளுக்கு இணங்க மையவாடி நிலம், அதற்கு செல்லும் பாதை மற்றும் ஏனைய அபிவிருத்திகளுக்காக 45 இலட்சம் ரூபா நிதி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேற்கொள்ள நிதி உதவி அவசியம் என்று இங்கு விஜயம் செய்த குழுவினரிடம் தவிசாளர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிதியினை தற்போது திரட்டும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இதற்கான கணிசமானவு நிதி தற்போது சேகரிக்கப்பட்டு விட்டது.அதனை விரைவில் ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியத் தலைர் சஹீட் எம். ரிஸ்மி , அகில இலங்கை ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் முக்கியஸ்தர் அப்துல் ர~Pட். ணுயஅ ணுயஅ அமைப்பின் பணிப்பாளர்களுள் ஒருவரான கியாஸ் ரவ்ப், கண்டி தேசிய வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர் முஹம்மத் ரிஸ்வி, பாருக் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் பஸ்லான் பாருக் மற்றும் சகோதரர் அப்துல் ஹாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சகல அரச உயர் அதிகாரிகளையும் சந்தித்ததுடன் மையவாடியினையும் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
(இக்பால் அலி)