மரத்தின் மீதேறிய பாடசாலை மாணவன்! தீயணைப்பு வண்டி உதவியுடன் காப்பாற்றிய பொலீசார்!

அட்டாளைச்சேனையில் இளைஞன் ஒருவன் மரத்தின் மேல் ஏறி இறங்க முடியாது எனவும் தற்கொலை செய்ய போவதாகவும் தெரிவித்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.
அட்டாளைச்சேனை பிரதான வீதியில் எரி பொருள் நிறப்பும் நிலையத்திற் கருகாமையிலுள்ள பாரிய மரம் ஒன்றின் மேல் ஏறி இளைஞன் ஒருவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளான்
இச் சம்பவம் பற்றி அக்கரைப்பற்று பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்து பொலிஸார் அக்கரைப்பற்று மாநகர சபை தீயனைப்பு பிரிவின் உதவியுடன் இளைஞனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுஅவனைப்பாதுகாப்பாக கீழே இறக்கி பொலிஸ் நிலையம் அழைத்துச்சென்றனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.