கடும் சண்டைகளுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தான் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கின் கட்டுப்பாடும் தலிபான்கள் வசமானது
கடுமையான மோதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரே தலிபான் எதிர்ப்பு கோட்டையான பன்ஜ்ஷிர் பள்ளத்தாக்கையும் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிடுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தலிபான்கள், பஞ்ஷிர் பள்ளத்தாக்கிலும் தனது அதிகாரத்தை ஒருங்கிணைத்துள்ளதாக கூறியுள்ளது.
பஞ்ஷிர் மோதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
பள்ளத்தாக்கை கைப்பற்றியதை தொடர்ந்து, தலைநகர் காபூல் உட்பட பல பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
தலைநகர் காபூலுக்கு வடக்கே உள்ள பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு ஆப்கானிஸ்தானின் மிகச்சிறிய மாகாணம் மற்றும் தலிபான் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரே மாகாணமாக இருந்தது.
இது ஒரு பாரம்பரிய தலிபான் எதிர்ப்பு கோட்டையாகக் கருதப்பட்டது.