100 பேருக்கு என்டிஜன் பரிசோதனை மேற்கொண்டால் அதில் அரைவாசிப் பேருக்கு கொரோனா தொற்று
குருநாகல் பொது வைத்தியசாலையில் ஒருநாளைக்கு 100 பேருக்கு என்டிஜன் பரிசோதனை மேற்கொண்டால் அதில் அரைவாசிப் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களாகவே இனங்காணப்பட்டு வருகின்றனர். அதன் மூடிவுகளை பொது மக்களுக்கு உடனுக்குடன் வட்சொப், டெலிகிராhம், முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளம் ஊடாக மக்களுக்கு தகவலினை வழங்குவதற்கான திட்டமொன்றை கொரோனா நடவடிக்கை மையம் ஆரம்பிக்கவுள்ளதாக என குருநாகல் மாகாண பொது வைத்தியசாலையின் பிரதான பணிப்பாளர் சந்தன கெந்தன்கமுவ தெரிவித்தார்.
குருநாகல் மாகாண பொது வைத்தியசாலையின் கொரோன நடவடிக்கை மையத்தின் மூலம் தினசரி வைத்தியசாலையில் கொரோனா என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் முடிவுகளை உடனுக்குடன் அறிவிப்பதற்கு என்ரோய் கையடக்க தொலைபேசிகள் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு இணங்க வைத்தியசாலையின் வேண்டுகோளின் பிரகாரம் குருநாகல் மாநகர சபை உறுப்பினரும் அசார்தீன் நற்பணி மன்றத் தலைவருமான அசார்தீன் மொய்னுதீன் அவர்களினால் வைத்தியசாலையின் கொரோனா நடவடிக்கை மையத்திற்கு அதற்குத் தேவையான இணையத்தள தொழில் நுட்ப உதவிகளையும் கையடக்க தொலைபேசியினையும் வழங்கி வைக்கும் நிகழ்வு வைத்தியசாலையின் கொரோனா நடவடிக்கை மையத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட குருநாகல் மாகாண பொது வைத்தியசாலையின் பிரதான பணிப்பாளர் சந்தன கெந்தன்கமுவ இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
ஒரு நாளைக்கு குருநாகல் வைத்தியசாலையில் 100 பேர் என்டிஜின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் முடிவுகளை அத்தாட்சியுடன் அறிவிப்பதற்கு வசதிகள் இருக்கவில்லை. எனினும் அதிகளவு தொலைபேசி மூலமாகவே தெரிவித்து வருகின்றோம். சில நேரங்களில் அவர்களை தொலையில் தொடர்பு கொள்ள முடியாதுள்ளது. அந்த வகையில் கொரோனா தொற்றுத் தொடர்பில் சமூக வலைத்தளம் ஊடாக உறுதி செய்யப்பட்ட தகவலையோ அல்லது உறுதி செய்யப்படாத தகவலையோ வழங்குவதற்கு இணைத்தள என்ரோய் கையடக்க தொலையினைப் பயன்படுத்தி அவர்களுடைய கையடக்க தொலைபேசிகளுக்கு அதனை அனுப்புவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம். இன்னும் ஒரு சில நாட்களில் இதன் மூலம் சேவைகள் இடம்பெறும் என்பதுடன் இதற்கான வசதிகளை ஏற்படுத்தி தந்த குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அசார்தீன் அவர்களுக்கு வைத்தியசாலையின் சார்பாக நன்றியினைத் தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அசார்தீன் மொய்னுதீன், கொரோனா நடவடிக்கை மையத்தின் சிரே~;ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஜினதாச, மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இக்பால் அலி