இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்த ஒக்சிஜன் சிலிண்டர்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுமார் 150டன் ஒக்சிஜன் சிலிண்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனாவின் 3-வது அலை பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.இந்த பேரிடரில் இருந்து மக்களை பாதுகாக்க இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் உதவியை இலங்கை நாடியுள்ளது.
இதை ஏற்று இலங்கைக்கு மத்திய அரசு உதவி வருகிறது. அந்தவகையில் கடந்த 22-ம் திகதி 100 டன் மருத்துவ ஒக்சிஜனை கடற்படை கப்பல் மூலம் அனுப்பி வைத்தது. இதன் தொடர்ச்சியாக மேலும் சுமார் 150 டன் ஒக்சிஜனை தற்போது மத்திய அரசு அனுப்பியுள்ளது.
விசாகப்பட்டினம், சென்னை துறைமுகங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இந்த ஒக்சிஜன், இலங்கையை அடைந்துவிட்டதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.