டோக்கியோ பாராலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவு.

நிறைவு விழாவில் பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. போட்டியில் பங்கேற்ற நாடுகளின் வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டின் கொடியுடன் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
163 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு பாராலிம்பிக்கில் தங்களது திறமையை வெளிக்காட்டினர். அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.