உண்மையான தடுப்பூசிகளை எவ்வாறு அடையாளம் காண்பது ? மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா செனகா நிறுவனங்களின் கண்டுபிடிப்பான கோவிஷீல்டு மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் தற்போது நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவேக்சின் உட்பட சில தடுப்பூசிகள் போலியாக தயாரிக்கப்பட்டு தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் வினியோகிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது இந்தியாவிலும் புழக்கத்தில் விடப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், இது குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் கூறுகையில், நம் நாட்டில் போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றார். இந்நிலையில், உண்மையான தடுப்பூசிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது தொடர்பாக, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. அதில், தடுப்பூசிகளின் மேல் உள்ள ‘லேபிள்’ எந்த நிறத்தில் இருக்கும், அதில் நிறுவனங்களின் குறியீடுகள் என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் மத்திய அரசு உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்றும், தற்போது வரை 69 கோடி பேர் இலவசமாக தடுப்பூசி போட்டுள்ளனர். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் நாட்டின் கடைக்கோடியில் உள்ள கடைசி குடிமகன் வரை தடுப்பூசியை கொண்டு சேர்க்க நாங்கள் விரும்புகிறோம்.

அந்தவகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி உறுதிபட தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.