பஞ்ச்ஷிர் அதிகாரப்பூர்வமாக தலிபான்களிடம் சரணடைந்தது (Video)
தலிபான் எதிர்ப்பு கோட்டையான ஆப்கானிஸ்தானின் கடைசி “வெல்லமுடியாத பள்ளத்தாக்கு” என சொல்லப்பட்ட பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கை முழுமையாக கைப்பற்றியதாக தலிபான் இன்று அறிவித்தது.
பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் உள்ள NRF எதிர்ப்பு குழு பள்ளத்தாக்கில் மிகவும் மூலோபாய இடங்கள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இரண்டு வார கடும் சண்டைக்குப் பிறகு பள்ளத்தாக்கு “முற்றிலும் கைப்பற்றப்பட்டது” என்று தலிபான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
“இன்று நாம் எதிரிகளின் கடைசி கோட்டையான பஞ்ஷிர் பள்ளத்தாக்கை கைப்பற்றியுள்ளோம்” என்று அது கூறியது.
“பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு மக்களுக்கு பாகுபாடு காட்டப்படாது என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். அவர்களும் எங்கள் சகோதரர்கள். ” என தலிபான்கள் தெரிவித்துள்னர்.
முன்னதாக, சுமார் 1,000 தலிபான் தீவிரவாதிகள் எதிரிகளால் கொல்லப்பட்டனர் அல்லது பிடிபட்டனர் எனத் தகவல் வெளியானது.
ஆப்கானிஸ்தானில் , தலிபான்களால் கைப்பற்ற முடியாத 34 மாகாணங்களில் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு கடைசியாக இருந்தது.
இதனால், ஆப்கானிஸ்தானின் அனைத்து மாகாணங்களையும் தலிபான் அதிகாரப்பூர்வமாக கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது.
சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், பள்ளத்தாக்கில் உள்ள கட்டிடங்களுக்கு இடையில் வெள்ளை கொடியை தலிபான்கள் ஏற்றி இருப்பதை காண முடிகிறது.