விண்ணப்பபடிவங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித்திகதி நீடிப்பு.

யாழில் முப்படையினர் மற்றும் பொலிசாரின் பாவனையிலுள்ள தனியார் காணிகள் காரணமாக இதுவரை மீளக்குடியமராத குடும்பங்களின் விபரங்களையும், பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்புக்குள்ளான காணி உரிமையாளர்களின் விபரங்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பாக குறிப்பிடப்பட்ட நடைமுறைகளுக்கமைவாக விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதிதிகதி 15.09.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்காக யாழ் மாவட்ட செயலக www.jaffna.dist.gov.lk
எனும் இணையத்தளத்தையும் பார்வையிடமுடியும்.