கிளிநொச்சியில் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த நபருக்குத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
81 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.