வவுனியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா! நேற்றைய தினம் 16 பேர் பலி

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக நேற்றைய தினம் மாத்திரம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தவர்கள், கொரோனா தொற்றுக் காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 16 பேரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.