கொரோனா தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் குறையும்!

அடுத்த இரண்டு வாரங்களில் சிறிலங்காவில் கொரோனா தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறையும் என அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.
மிகவும் வெற்றிகரமான தடுப்பூசி திட்டம் மூலம், தற்போது நோயாளிகளின் பரவலில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளது.
சுமார் 9.5 மில்லியன் மக்கள் தடுப்பூசியின் இரண்டாவது அளவைப் பெற்றனர்.
அடுத்த இரண்டு வாரங்களில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு விடும்.
இதையடுத்து அவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி வளர்ச்சியடைந்து, அதன்மூலம் பிறருக்கு நோய் பரவுதல் குறைவடைந்து நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் இறப்புகளை கணிசமாகக் குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என அமைச்சர் கூறினார்.