அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படுகிறதா?
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என தெரியவருகின்றது.
கொரோனா ஒழிப்பு செயலணியின் வாராந்த மீளாய்வுக்கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.
இதன்போதே நாட்டின் தற்போதைய நிலைமை மீளாய்வு செய்யப்பட்டு ஊரடங்கு தளர்த்தப்படுமா அல்லது நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை ஒக்டோபர் 2ஆம் திகதிவரை நீடிக்குமாறு மருத்துவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.